TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் காலநிலை உச்சி மாநாடு – நிறைவு

December 18 , 2019 1711 days 646 0
  • ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றன. ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தை இதுவேயாகும்.
  • இந்த மாநாட்டில் கரிமச் சந்தையின் ஒழுங்குமுறைக்குத் தீர்வு காண்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
  • கரிமச் சந்தையானது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுக்காக அதன் விலைகளை நிர்ணயிக்கின்றது.
  • பாரிஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான உடன்பாட்டை எட்ட இந்த உச்சி மாநாடு தவறிவிட்டது.
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டமானது பின்வரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது:
    • உமிழ்வு இடைவெளி அறிக்கை
  • 2100 ஆம் ஆண்டிற்குள் பூமியின் சராசரி வெப்பநிலையானது 3.2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கின்றது.
    • உலகளாவிய கார்பன் திட்ட (Global Carbon Project - GCP) அறிக்கை
  • 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட GCP ஆனது உலகளாவிய கார்பன் உமிழ்வுகளையும் அவற்றின் காரணங்களையும் அளவிட முயல்கின்றது.
  • இந்த உச்சி மாநாட்டின் தலைமைத்துவ நாடான சிலி ஆனது (இந்த உச்சி மாநாடு ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெற்றது), காலநிலை லட்சியக் கூட்டணியை (Climate Ambition Alliance - CAA) தொடங்கியுள்ளது.
    • 2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வு நிகர சுழியத்தை அடைவதற்கு CAA ஆனது தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்