ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்களுக்கான சர்வதேச தினம் - மே 29
May 29 , 2024 179 days 155 0
1948 ஆம் ஆண்டில் "ஐக்கிய நாடுகள் சபையின் படைப்பிரிவு மேற்பார்வை அமைப்பு" அல்லது UNTSO என பெயரிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை யானது பாலஸ்தீனத்தில் செயல்படத் தொடங்கிய தேதி இதுவாகும்.
இந்த நாளில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு நடவடிக்கைகளில் பெரும் பணியாற்றும் அனைத்து ஆடவர் மற்றும் மகளிரின் தொழில்முறை, அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்குக் கௌரமளிக்கும் விதமாகவும், அமைதிக்காக வேண்டி உயிர் நீத்தவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
வன்முறை, விபத்துக்கள் மற்றும் நோய்களின் விளைவாக இன்று வரை 3,900 ராணுவம், காவல்துறை மற்றும் பொதுமக்கள் அமைதி காப்புப் பணியில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப்படையினர் பலதரப்பட்டக் கலாசாரப் பின்னணிகளைக் கொண்டும், தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் உறுப்பினர் நாடுகளையும் சார்ந்தவர்கள் ஆவர்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Fit for the Future: Building Better Together" என்பதாகும்.