ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் படையினருக்கான நினைவுச் சுவர்
June 22 , 2023 523 days 250 0
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, பணியில் மரணமடைந்த அமைதிப் படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுச் சுவர் ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிறுவுவது தொடர்பாக இந்தியா முன்வைத்த வரைவுத் தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ‘ஐக்கிய நாடுகள் சபையின் மரணமடைந்த அமைதி காப்புப் படை வீரர்களுக்கான நினைவுச் சுவர்’ என்ற தலைப்பிலான ஒரு வரைவுத் தீர்மானத்தினை இந்தியா அறிமுகப்படுத்தியது.
இந்தத் தீர்மானத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையில் ஏறக்குறைய 190 உறுப்பினர் நாடுகளால் ஒரு இணை அனுசரணை வழங்கப்பட்டு, பின் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
2015 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு, மகத்தான தியாகம் செய்த இந்தியப் படை வீரர்களுக்கென என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்ட மெய்நிகர் நினைவுச் சுவரினை வெளியிட்டது.