ஐவரி கோஸ்ட் நாடானது, ஐக்கிய நாடுகள் சபையின் நீர் உடன்படிக்கையில் தற்போது இணைந்ததையடுத்து, இந்த உடன்படிக்கையில் பங்கு பெற்ற 10வது ஆப்பிரிக்க நாடாக மாறியுள்ளது.
இது தற்போது 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நீர் உடன்படிக்கையின் 53வது பங்குதாரர் நாடாகும்.
இந்த உடன்படிக்கை ஆனது, பன்னாட்டு நீர்வழிகள் மற்றும் சர்வதேச ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு பற்றிய உடன்படிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையானது, ஆரம்பத்தில் ஐரோப்பியப் பிராந்தியம் முழுவதிற்குமான ஒரு பிராந்தியக் கட்டமைப்பாக நிறுவப்பட்டது.
2016 ஆம் ஆண்டில் இது ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர் நாடுகளும் பங்கு பெற அனுமதிக்கப்பட்டது, ஆனாலும் இந்தியா இந்த உடன்படிக்கையில் ஒரு பங்குதாரராக இடம் பெறவில்லை.
இந்த உடன்படிக்கையானது பகிரப்பட்ட நீர் ஆதாரங்களின் நிலையான மேலாண்மை, நிலையான மேம்பாட்டு இலக்குகளைச் செயல்படுத்துதல், மோதல்களைத் தடுத்தல் மற்றும் அமைதி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான சட்டப் பிணைப்பு செயற்கருவியாகும்.