TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை தொடர்பான ஆணையம்

December 26 , 2022 574 days 274 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை தொடர்பான ஆணையத்தில் (CSW) இருந்து ஈரான் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்ட நிலையில், இதற்கான ஒரு வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது.
  • ஈரான் நாட்டினை அந்தக் குழுவில் இருந்து நீக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகச் சபையில் அமெரிக்க நாட்டினால் முன்வைக்கப்பட்ட ஒரு முன்மொழிதலுக்கு ஆதரவாக 29 வாக்குகள் கிடைத்தன.
  • 54 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையில், இந்த முன் மொழிதலுக்கு எதிராக எட்டு வாக்குகளும், 16 நாடுகள் வாக்களிக்காமல் விலகவும் செய்தன.
  • ஈரான் நாட்டின் அறநெறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த 22 வயதான மஹ்சா அமினியின் மரணம் காரணமாக செப்டம்பர் மாதம் முதல் ஈரான் நாட்டில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை தொடர்பான ஆணையம் ஆனது (CSW) 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையின் உண்மை நிலையினை ஆவணப்படுத்துவதற்கும், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த உலகளாவியத் தரநிலைகளை வடிவமைக்கச் செய்வதற்கும் இந்த அமைப்பு ஒரு செயற்கருவியாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்