ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை
February 10 , 2024 289 days 306 0
2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஒதுக்கீட்டிற்கு இந்தியா 32.89 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தியுள்ளது.
தனது வருடாந்திர நிதிநிலை ஒதுக்கீட்டின் நிலுவைத் தொகையினைச் சரியான நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் செலுத்தியுள்ள 36 உறுப்பினர் நாடுகளின் "மதிப்புமிக்க நாடுகளின் பட்டியலில்" இணைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு (நிதிநிலை அறிக்கை) தனது பங்களிப்பை சரியான நேரத்தில் மற்றும் முழுமையாகச் செலுத்தும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.