ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் (UNEA - UN Environment Assembly) நான்காவது சந்திப்பானது கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது.
UNEA-ன் கருத்துருவானது, “சுற்றுச்சூழல் சவால்கள், நீடித்த நுகர்வு மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான புத்தாக்கத் தீர்வுகள்” என்பதாகும்.
UNEA 4-ன் தலைமை நாடாக எஸ்தோனியா உள்ளது.
UNEA என்பது சுற்றுச் சூழல் குறித்து உலகின் உயர்மட்ட நிலையில் முடிவு எடுக்கும் ஒரு அமைப்பாகும்.
இது தற்பொழுது உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் மிக அபாயகரமான சுற்றுச் சூழல் சவால்களைக் களைகிறது.
UNEA ஆனது 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
இந்தக் கருத்தரங்கானது பொதுவாக ரியோ + 20 என்றறியப்படுகின்றது.
முதலாவது மற்றும் இரண்டாவது அமர்வுகளானது சட்ட விரோத வனவிலங்கு வர்த்தகம், காற்றின் தரம், சுற்றுச்சூழல் சட்ட விதிமுறை, பசுமைப் பொருளாதாரத்திற்கு நிதியளித்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவற்றின் மிக முக்கியமான சவால்கள் குறித்த தீர்மானங்களை எடுத்து, அதை ஏற்றுக் கொண்டது.
UNEA-ன் மூன்றாவது அமர்வானது “மாசுபாடற்ற கிரகத்தை நோக்கி” என்ற கருத்துருவுடன் நைரோபியில் நடைபெற்றது.
UNEA ஆனது 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுகிறது.