ஐக்கிய நாடுகள் தினம் - அக்டோபர் 24
October 24 , 2024
8 days
131
- இந்த நாள் ஆனது, 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டில் 51 நாடுகள் உலக அமைதி மற்றும் பாதுகாப்பைக் காக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவின.
- 'ஐக்கிய நாடுகள்' என்ற பெயரை அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் D. ரூஸ்வெல்ட் உருவாக்கினார்.
- இது தற்போது 193 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர் நாடுகளில் ஒவ்வொன்றும் பொதுச் சபையில் அங்கம் வகிக்கின்றன.
- இந்த நாள் என்பது முதன் முதலில் 1948 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
Post Views:
131