TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் தினம் – அக்டோபர் 24

October 28 , 2020 1403 days 332 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இத்தினமானது நடைமுறைக்கு வந்த ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டானது (2020) ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெற்றிகரமான செயல்பாட்டின் 75வது ஆண்டைக் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நமக்கு தேவையான எதிர்காலம், நமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் : பலதரப்பிற்கான நமது கூட்டுப் பொறுப்புடைமையை உறுதி செய்தல் என்பதாகும்.
  • இந்தத் தினமானது இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • உலகப் போரின் நேச நாடுகள் 1942 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பை  ஏற்படுத்த முயற்சி செய்தன.
  • நேச நாடுகளின் முடிவுகள் ஐக்கிய இராஜ்ஜியம், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன.
  • இந்த மூன்று நாடுகளும் “மிகப்பெரிய 3 நாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • சீனாவுடன் சேர்த்து இந்த 4 நாடுகளும் “ஐக்கிய நாடுகளின் 4 காவலர்கள் என்று அழைக்கப் படுகின்றன.
  • ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகியவை அச்சு நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்