TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகள்

June 14 , 2023 531 days 293 0
  • அல்ஜீரியா, கயானா, கொரியக் குடியரசு, சியரா லியோன் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் நாடுகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அல்பேனியா, பிரேசில், காபோன், கானா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குப் பதிலாக இவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாகச் செயல்படும்.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது, 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் மற்றும் 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
  • 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
  • அவற்றிற்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப் படுவதோடு அந்த வாக்கெடுப்பில் போட்டியிடும் நாடுகள் மூன்றில் இரண்டு பங்கு என்ற ஒரு அளவில் பெரும்பான்மை அல்லது 128 வாக்குகளைப் பெற வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்