TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் புதிய உறுப்பினர்கள்

January 10 , 2023 559 days 272 0
  • ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் புதிய உறுப்பினராக இணைந்துள்ளன.
  • சமீபத்தில் இணைந்த இந்த ஐந்து உறுப்பினர் நாடுகள் இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ மற்றும் நார்வே ஆகியவற்றிற்குப் பதிலாக இடம் பெறுகின்றன.
  • அல்பேனியா, பிரேசில், காபோன், கானா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தற்போதைய இரண்டு ஆண்டு பதவிக் காலம் கொண்ட மற்ற உறுப்பினர் நாடுகள் ஆகும்.
  • சீனா, பிரான்சு, ரஷ்யா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்தச் சபையில் நிரந்தர மற்றும் தடுப்பாணை அதிகாரம் கொண்ட உறுப்பினர் நாடுகள் ஆகும்.
  • இச்சபையின் மற்ற 10 உறுப்பினர் நாடுகள், 193 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பொதுச் சபையினால் இரண்டு வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்