TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உக்ரைன் மீதான செயல்முறை வாக்கெடுப்பு

August 28 , 2022 695 days 323 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளப்பட்ட உக்ரைனுக்கு எதிரான ஒரு செயல்முறை வாக்கெடுப்பின் போது, இந்தியா, முதல் முறையாக, ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தது.
  • உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை காணொளிக் காட்சி மூலம் ஒரு சந்திப்பில் உரையாற்ற அழைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பை நடத்தியது.
  • ரஷ்யத் தூதர் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சபையில் உரையாற்ற அனுமதிக்கும் விவகாரத்தின் மீது ஒரு செயல்முறை வாக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு கோரினார்.
  • இந்தியா தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தன் பதவிக் காலம் டிசம்பர் மாதத்தில் முடிவடைகிற நிலையில் இரண்டு வருடக் காலத்திற்கு ஒரு நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது..
  • ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று, ஒரு செயல்முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இதில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பினர் நாடுகளில் 13 நாடுகள் ஜெலென்ஸ்கியைச் சபையில் உரையாற்ற அனுமதிப்பதற்கு ஆதரவாக வாக்கு அளித்தனர்.
  • இதற்கு ரஷ்யா எதிராக வாக்களித்த நிலையில் சீனா இதில் வாக்களிப்பைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
  • செயல்முறை வாக்கெடுப்பின் மீதான பாதுகாப்புச் சபையின் முடிவுகள் அதன் ஒன்பது உறுப்பினர்களின் ஒரு உறுதியான வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்