TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் பிரெஞ்சு மொழி தினம் – மார்ச் 20

March 20 , 2019 2019 days 444 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 அன்று ஐக்கிய நாடுகள் பிரெஞ்சு மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது 2010 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுவதும் அனைத்து 6 அலுவல்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் பன்மொழி வழக்கு மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மை ஆகியவற்றை அனுசரிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • பிரெஞ்சு மொழியானது 29 நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது.
  • மேலும் இம்மொழியானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல் மொழியாகவும் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச அமைப்புகளின் அலுவல் மொழியாகவும் உள்ளது.
  • மார்ச் 20 என்ற தினமானது சர்வதேச லா பிரான்கோபோனி எனும் தினமாகவும் சர்வதேச பிரான்கோபோனி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்