வருடந்தோறும் ஜுன் மாதம் 06 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் ரஷ்ய மொழி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வு 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பால் நிறுவப்பட்டதாகும்.
இந்நிகழ்வின் அனுசரிப்பு ரஷ்யக் கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின் என்பவரின் பிறந்த நாளோடு ஒத்துப் போகின்றது.
அவர் நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை என அறியப்படுகின்றார்.
பன்மொழித் தன்மை மற்றும் கலாச்சாரப் பன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கவும், தனது நிறுவனம் முழுவதும் ஐக்கிய நாடுகளின் அலுவலகப் பணி மொழிகள் ஆறையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றது.