ஐக்யூஎம்பி (IQMP) மென்பொருள் செயலி- இந்திய ராணுவம்
November 6 , 2017 2605 days 806 0
இந்திய இராணுவம், இராணுவப் பிரிவின் பல்வேறு தளவாடங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை தானியங்குபடுத்துதலுக்கான மென்பொருள் செயலியான இன்டகிரேடட் குவார்டர் மாஸ்டர் பேக்கேஜ்ஜை (IQMP-Integrated Quarter Master Package) தொடங்கி வைத்துள்ளது.
ஐக்யூஎம்பி (IQMP) என்ற இணையம் சார்ந்த மென்பொருளை இந்திய இராணுவ மென்பொருள் மேம்பாட்டு மையம், TCS நிறுவனத்தோடு சேர்ந்து உருவாக்கியுள்ளது.
இந்தச் செயலியானது இராணுவப் பிரிவின் பல்வேறு தளவாடங்கள் தொடர்பான செயல்பாடுகளை தானியங்குப்படுத்தும். இந்தச் செயலியானது பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த மென்பொருள்களான ‘வஸ்த்ரா’ மற்றும் குவார்டர் மாஸ்டர் பேக்கேஜ் (Quarter Master Package) போன்றவற்றிற்கு மாற்றாக அமையும்.
இந்தச் செயலியானது இராணுவத்தின் பல்வேறு பிரிவுகளின் குறிப்பிட்ட தேவைகளைப் சந்திக்கும் வகையில் அதன் கட்டமைப்பை மாற்றியமைக்கவல்லது.
இந்தச் செயலியானது தளவாடங்களின் நிர்வகித்தல் களத்துடன் தொடர்புடைய மற்ற மென்பொருள் செயலிகளுடன் தகவல் மட்டும் தரவைப் பகிர்ந்து கொள்ளும் திறனைக் கொண்டது.