TNPSC Thervupettagam

ஐங்கண் கூட்டணி

September 30 , 2023 294 days 189 0
  • கனடாவின் பிரிவினைவாத தலைவர் ஹர்மீத் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட நிகழ்வில் இந்திய அரசாங்கத்திற்கு "சாத்தியமான தொடர்புகள்" இருக்கலாம் என்று கனடா கூறுகிறது.
  • இந்தப் பிரச்சினை "ஐங்கண் கூட்டணியின் பங்குதாரர்களிடையே பகிரப்பட்ட தகவல்" ஆகும்.
  • "ஐங்கண்" என்பது அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவுத்துறைப் பகிர்வுக் கூட்டணியைக் குறிக்கிறது.
  • 1943 ஆம் ஆண்டில், ஐக்கியப் பேரரசு-அமெரிக்க (UKUSA) உடன்படிக்கையாக மாற்றப் பட்ட பிரிட்டன்-அமெரிக்கா (BRUSA) ஒப்பந்தத்தின் அடித்தளத்தை அமைத்தது.
  • ஐக்கியப் பேரரசு-அமெரிக்க (UKUSA) உடன்படிக்கையானது 1946 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • கனடா 1949 ஆம் ஆண்டிலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 1956 ஆம் ஆண்டிலும் இந்த அமைப்பில் இணைந்து ஐங்கண் கூட்டணியை உருவாக்கின.
  • 2016 ஆம் ஆண்டில், ஐங்கண் புலனாய்வு மேற்பார்வை மற்றும் மறு ஆய்வுச் சபை உருவாக்கப்பட்டது.
  • இது ஐங்கண் கூட்டணியின் உறுப்பினர் நாடுகளின் அரசியல் சாராத உளவுத் துறை மேற்பார்வை, மறு ஆய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கியது.
  • அந்த நாடுகள் பரஸ்பர நலன்களைப் பரிமாறிக் கொண்டு, சிறந்த நடைமுறைகளை ஒப்பிட்டு, ஒவ்வோர் ஆண்டும் மாநாடுகளை நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்