TNPSC Thervupettagam

ஐசிஐசிஐ வங்கி மீதான அபராதம் – இந்திய ரிசர்வ் வங்கி

April 3 , 2018 2282 days 742 0
  • இந்திய ரிசர்வ் வங்கி, அதனால் அளிக்கப்பட்ட நெறி முறைகளுக்கு இணக்கம் காட்டவில்லையென்று ஐசிஐசிஐ வங்கியின் மீது ரூபாய்9 கோடி அளவிற்கு அபராதம் விதித்துள்ளது.
  • 1949ம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் படி இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
  • முதிர்ச்சி காலத்திற்காக வைக்கப்பட்டிருந்த அரசுப் பத்திரங்களை தொடர்ச்சியாக விற்பனை செய்தமைக்காக ரிசர்வ் வங்கி ஐசிஐசிஐ வங்கியின் மீது அபராதம் விதித்துள்ளது.
  • ஒரே சம்பவத்தின் மீது அதிகபட்சமான அபராதத் தொகை இந்திய ரிசர்வ் வங்கியால் விதிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்

  • ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் படி வங்கிகள் தங்களிடம் உள்ள முதலீடுகளை மூன்று வகையாகப் பிரித்தல் வேண்டும். அவை வர்த்தகத்திற்கென உள்ளவை, விற்பனைக்கென உள்ளவை, முதிர்ச்சிக்கென உள்ளவை.
  • வங்கிகளால் முதிர்வுக் காலம் வரை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாங்கப்படும் பத்திரங்கள் முதிர்வுக்காக வைத்திருக்கப்படும் பத்திரங்கள் எனப் பொருள்படும்.
  • ஒரு வேளை முதிர்வுக்காக வைக்கப்பட்டுள்ள முதலீடுகளில் இருந்து 5 சதவிகிதத்திற்கு மேலாக முதிர்வுப் பத்திரங்களின் விற்பனை இருப்பின், வங்கிகள் அவற்றை தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்