TNPSC Thervupettagam

ஐநா சபையின் உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை 2025

January 15 , 2025 2 days 33 0
  • உலகளாவியப் பொருளாதார வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டில் 2.8% ஆகவும், 2026 ஆம் ஆண்டில் 2.9% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2.8% விகிதத்திலிருந்து மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அளவிலிருந்து பெரும்பாலும் மாறவில்லை.
  • 2024 ஆம் ஆண்டில் 4.9% ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 4.8% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதையடுத்து, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகப் படிப்படியான பொருளாதார மாற்றத்தினை எதிர்கொள்கிறது.
  • 2024 ஆம் ஆண்டில் சுமார் 6.8% வளர்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் ஆனது, முதன்மையாக வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகளின் ஆதரவுடன் 2025 ஆம் ஆண்டில் 6.6% விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியப் பொருளாதாரம் ஆனது 2026 ஆம் ஆண்டில் சுமார் 6.8% வளர்ச்சி நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் நுகர்வோர் விலை பணவீக்கம் ஆனது 2024 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 4.8 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 4.3% ஆகக் குறையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்