உலகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும், சாலை விபத்துகளால் உண்டாகும் இறப்புகளை குறைத்து உயிர்களைக் காப்பதற்காகவும் ஐநா அவையானது ஐநா சாலை பாதுகாப்பு அறக்கட்டளை நிதியத்தை (UN Road Safety Trust Fund) தொடங்கியுள்ளது.
சாலை பாதுகாப்பு மீதான தீர்மானத்தை ஐநா பொது அவை (UN General Assembly -UNGA) அண்மையில் ஏற்றுக் கொண்டது..
ஐ.நாவின் ஐரோப்பாவிற்கான பொருளாதாரக் குழுவானது (UN Economic Commission for Europe-UNECE) ஐநா சாலை பாதுகாப்பு அறக்கட்டளை நிதியத்தின் செயலகமாகும் (secretariat) .
சாலை பாதுகாப்பிற்கான பத்தாண்டு (2011 – 20) செயல்பாடுகளுக்கான உலகளாவிய திட்டத்தின் {Global Plan for Decade of Action for Road Safety (2011-20)} ஐந்து தூண்களோடு இணைந்து சாலை பாதுகாப்பிற்கான பிற முயற்சிகளுக்கு இந்நிதியம் ஆதரவு வழங்கும்.
அவையாவன
மேம்படுத்தப்பட்ட விபத்துக்குப் பின்னான சிகிச்சை
சாலை பயன்பாட்டாளர்களின் மேம்பட்ட மனப்போக்கு
வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்
சாலை உள்கட்டமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பரந்த போக்குவரத்து நெட்வோர்க் அமைப்புகள்
வலுப்படுத்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு மேலாண்மை திறன்கள்
அனைத்து நிலைகளிலும் திறம்பட்ட சாலை பாதுகாப்பு செயல்பாடுகளுக்காக மூல ஆதாரங்களின் திரட்டல்களில் உள்ள இடைவெளியை நீக்குவதன் மூலம் உலக சாலை பாதுகாப்பை அதிகரிப்பதில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதே இந்நிதியத்தின் நோக்கமாகும்.