TNPSC Thervupettagam

ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தரமல்லாத உறுப்பினர்கள்

June 10 , 2018 2360 days 720 0
  • ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் (United Nations Security Council) ஐந்து புதிய நிரந்தரமல்லா உறுப்பினர்களை (Non-Permanent) ஐநா பொது அவை (United Nations General Assembly) தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தப் புதிய உறுப்பினர்களின் பதவிக் காலம் இரண்டாண்டுகளாகும்.
  • ஐ.நா-வின் ஒட்டுமொத்த அமைதி மற்றும் பாதுகாப்புச் செயற்பாட்டு நிரல்களை (UN’s whole peace and security agenda) நிர்ணயிக்கின்ற அமைப்பே ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலாகும்.

  • ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 நாடுகளாவன:
    • ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், டொமினிகன் குடியரசு
  • பொலிவியா, எத்தியோப்பியா, கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவீடன் ஆகிய வெளியேறுகின்ற ஐந்து நாடுகளால் உண்டாகும் காலியிடத்தை இந்நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன.
  • மொத்தம் 10 நிரந்தரமல்லா உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தொடர்கின்ற மீத ஐந்து நாடுகளாவன ஐவரி கோஸ்ட், 2. நிலநடுக்கோட்டு கினியா, 3. குவைத், 4. பெரு, 5. போலந்து.
  • இப்புதிய 5 புதிய நிரந்தமல்லா உறுப்பு நாடுகளுள் முதல் முறையாக டொமினிகன் குடியரசு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளது. பிற நான்கு நாடுகள் ஏற்கனவே பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ளன.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்