TNPSC Thervupettagam

ஐந்தாண்டு பருத்தித் திட்டம் 2025

February 10 , 2025 17 days 87 0
  • இந்தத் திட்டம் ஆனது பருத்திகளின், குறிப்பாக கூடுதல் நீளம் கொண்ட தரமான இழை கொண்ட பருத்தி வகைகளின் உற்பத்தித் திறனை நன்கு அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவும் வழங்கப் படும்.
  • இந்தத் திட்டமானது, 5F கொள்கைக்கு இணங்க உள்ளது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடுத் தரமான பருத்தியின் நிலையான விநியோகத்தை அதிகரிக்கும்.
  • இந்த முன்னெடுப்பு ஆனது உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம், மூலப் பொருள்களின் கிடைக்கும் தன்மையினை உறுதிப்படுத்தி, இந்திய ஜவுளித் துறையின் உலகளாவியப் போட்டித் தன்மையை அதிகரிக்கும்.
  • வேளாண்-ஜவுளி, மருத்துவ ஜவுளி மற்றும் செயற்கை இழை சார் ஜவுளி போன்ற தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை போட்டி விலையில் ஊக்குவிப்பதற்காக மிக முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட ஜவுளி இயந்திரங்களின் பட்டியலில் மேலும் இரண்டு வகையான ஊடூசி இல்லாத தறிகள் சேர்க்கப்பட்டன.
  • மத்திய நிதிநிலை அறிக்கையில், ஜவுளி அமைச்சகத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்காக 5272 கோடி ரூபாய் (நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகள்) ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்