TNPSC Thervupettagam
April 17 , 2025 5 days 63 0
  • மிகவும் குறைவாகவே அறியப்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயானது ஐந்தாம் வகை நீரிழிவு நோய் என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இளம் மற்றும் மெலிந்த உடல் கொண்ட இளம் பருவத்தினரிடையே அடிக்கடி ஏற்படும் இந்தப் பாதிப்பு ஆனது, முதலில் 1955 ஆம் ஆண்டில் ஜமைக்காவில் பதிவாகியது, பின்னர் இது J-வகை நீரிழிவு என வரையறுக்கப்பட்டது.
  • 1960 ஆம் ஆண்டுகளில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்காவின் துணை-சஹாராவின் சில பகுதிகளில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்களில் இந்தப் பாதிப்பு பதிவாகியது.
  • 1985 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பானது இந்தப் பாதிப்பு நிலையை நீரிழிவு நோயின் ஒரு மிக தனித்துவமான வடிவமாக அங்கீகரித்தது ஆனாலும் அது 1999 ஆம் ஆண்டில் அந்த வகையை நீக்கியது.
  • ஐந்தாம் வகை நீரிழிவு நோய் என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாகும் என்பதோடு இது மிகப் பொதுவாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மெலிந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கிறது.
  • முதல் வகை நீரிழிவு நோயாளிகளைப் போல அல்லாமல் இன்சுலின் ஊசிகள் இந்த நோயாளிகளுக்குப் பயனளிக்காது.
  • இது உலகளவில் முக்கியமாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 20 முதல் 25 மில்லியன் மக்களைப் பாதிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்