TNPSC Thervupettagam

ஐந்தாவது காவல் ஆணையப் பரிந்துரைகள்

February 27 , 2025 5 days 121 0
  • ஐந்தாவது தமிழ்நாடு மாநிலக் காவல் ஆணையம் ஆனது, மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள காவலர்களுக்கு, அவர்களின் சகாக்களுக்கு இணையான ஊதிய உயர்வை வழங்குவதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • இதன்படி வாழ்க்கைச் செலவினக் குறியீட்டிற்கு ஏற்ப கொடுப்பனவுகள் அவ்வப்போது மாறுபடலாம்.
  • காவலர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை '10 ஆம் வகுப்பு தேர்ச்சி' என்பதில் இருந்து '+2 தேர்ச்சி' அல்லது அதற்கு இணையானதாக உயர்த்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
  • அவர்களின் மனநலத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
  • பெங்களூருவின் NIMHANS நிறுவனத்துடன் இணைந்து, அவ்வப்போது காவலர் நலம் பேணல் திட்டத்தினைத் தொடருமாறு வலுவாகப் பரிந்துரைத்துள்ளது.
  • தொடர் கண்காணிப்பு, உளவியல் ஆலோசனை மற்றும் மனநல நிபுணர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைப்பதற்காக, தொடர் புகைப்பிடிப்புப் பழக்கமுடையவர்கள் மற்றும் மது அல்லது போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும்.
  • தமிழக மாநில அரசானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி C.T. செல்வம் அவர்கள் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையத்தினை அமைத்தது.
  • இதில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K. அலாவுதீன், ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரி K. ராதாகிருஷ்ணன், பிரபல மனநல மருத்துவரான டாக்டர் C. இராமசுப்பிரமணியம் மற்றும் ஓய்வு பெற்றப் பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்