ஐந்தாவது தேசிய நீர் விருதுகளின் (2023) வெற்றியாளராக ஒடிசா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், குஜராத் மற்றும் புதுச்சேரி இணைந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த விருதானது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள நீர்ப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மிகவும் சிறந்தப் பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில் ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கியது.
சிறந்த முறையில் நீரைப் பயன்படுத்தும் சங்கம் பிரிவில், புதுக்கோட்டையில் உள்ள பரம்பூர் ஏரி நீர் பயன்பாட்டுச் சங்கம் மூன்றாம் பரிசைப் பெற்றது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமானது, மிகவும் சிறந்த நிறுவனம் (பள்ளி/கல்லூரி தவிர) பிரிவில் முதல் பரிசைப் பெற்றது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆனது சிறந்த நிறுவனம் (பள்ளி/கல்லூரி தவிர) பிரிவில் மூன்றாம் பரிசை வென்றது.
சிறந்த தொழில் துறைப் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்ட அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் (ADL) நிறுவனம் 2வது பரிசை வென்றது.