ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, பழங்குடியின வேளாண் பொருட்களுக்கான மதிப்புக் கூட்டல் அலகுகளை அமைப்பதற்காக வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை இறுதி செய்து வருகிறது.
ஐந்திணைத் திட்டம் என்றும் அழைக்கப்படும் இது தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகங்களின் சமூக-பொருளாதார நலன் மேம்பாட்டிற்கான நில அடிப்படையிலான தொகுப்பு சார் அணுகுமுறையாகும்.
இத்திட்டத்தின் கீழ், இந்த மாவட்டங்களில் உள்ள பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் சமூகங்களிலிருந்து தலா 200 முதல் 300 உறுப்பினர்களைக் கொண்ட 14 சங்கங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
அதன் உறுப்பினர்களுக்கு மதிப்புக் கூட்டல் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை நன்கு சந்தைப் படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.