TNPSC Thervupettagam

ஐந்திணை திட்டம்

November 22 , 2024 54 days 305 0
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, பழங்குடியின வேளாண் பொருட்களுக்கான மதிப்புக் கூட்டல் அலகுகளை அமைப்பதற்காக வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை இறுதி செய்து வருகிறது.
  • ஐந்திணைத் திட்டம் என்றும் அழைக்கப்படும் இது தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகங்களின் சமூக-பொருளாதார நலன் மேம்பாட்டிற்கான நில அடிப்படையிலான தொகுப்பு சார் அணுகுமுறையாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், இந்த மாவட்டங்களில் உள்ள பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் சமூகங்களிலிருந்து தலா 200 முதல் 300 உறுப்பினர்களைக் கொண்ட 14 சங்கங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • அதன் உறுப்பினர்களுக்கு மதிப்புக் கூட்டல் மற்றும் அவர்களின் தயாரிப்புகளை நன்கு சந்தைப் படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்