TNPSC Thervupettagam

ஐந்து கண்கள் (Five Eyes) திட்டம்

July 9 , 2019 1872 days 854 0
  • சீனத் தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான ஹவாய் நிறுவனத்தின் சாதனங்கள் அல்லது சேவைகளை ஐந்து கண்கள் (Five Eyes) எனப்படும் நாடுகள் பயன்படுத்தினால், அந்நாடுகளுடன் பகிரப்பட்டு வரும் நுண்ணறிவுத் தரவுகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
  • ஐந்து கண்கள் என்ற பெயரானது நுண்ணறிவு ஆவணங்களின் பாதுகாப்பு வகைப்பாட்டைக் குறிக்கும். அந்த நாடுகள் பின்வருமாறு
    • ஆஸ்திரேலியா
    • கனடா
    • நியூசிலாந்து
    • ஐக்கியப் பேரரசு
    • அமெரிக்கா
  • இந்தத் திட்டமானது அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளுக்கிடையே நுண்ணறிவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக 1946 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் பின் பிற நாடுகள் இத்திட்டத்தில் இணைந்தன.
  • பனிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இந்த நாடுகள் இரஷ்யாவை உளவு பார்த்தன. 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பு, இந்த நாடுகள் சர்வதேசத் தீவிரவாதிகளையும் கண்காணிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்