TNPSC Thervupettagam

ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்

December 27 , 2024 26 days 73 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், இரண்டு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார், மேலும் மூன்று பேரை இடம் மாற்றி, ஐந்து மாநிலங்களின் ஆளுநர் பதவிகளை மறுசீரமைத்துள்ளார்.
  • மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக உள்ள அனுசுயா உய்கேக்கு பதிலாக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான், பீகாருக்குப் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
  • மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஹரி பாபு கம்பம்பட்டி ஒடிசா மாநிலத்திற்கு மாற்றப் பட்டுள்ளார்.
  • ஜெனரல் (டாக்டர்) விஜய் குமார் சிங், தற்போது மிசோரம் மாநில ஆளுநராகப் பணியாற்ற உள்ளார்.
  • பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்த இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்