TNPSC Thervupettagam

ஐன்ஸ்டீன் குறுக்கு வெட்டுக்கள்

August 13 , 2023 471 days 373 0
  • இந்த நிகழ்வானது 1915 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களால் அவரது பொதுச் சார்பியல் கோட்பாட்டின் விளைவாக முதலில் கணிக்கப் பட்டது.
  • ஐன்ஸ்டீன் குறுக்கு வெட்டுக்கள் ஒரு கண்கவர் வானியல் நிகழ்வாகும்.
  • இது டென்னிஸ் வால்ஷ் தலைமையிலான ஒரு வானியலாளர்கள் குழுவால் 1985 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பெகாசஸ் விண்மீன் திரளில் அமைந்துள்ள இது Q2237+0305 என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது அலைநீளத்தில் z= 1.7 என்ற சிவப்பு நிறப் பெயர்ச்சியினைக் கொண்டிருந்தது.
  • இது அதிகத் தொலைவில் அமைந்த, இதுவரையில் அறியப்பட்ட துடிப் பண்டங்களில் (குவாசர்) ஒன்றாக இதனைச் சேர்க்கிறது.
  • குறுக்கு வெட்டுத் தோற்றம் போன்ற ஒரு வடிவத்தினைக் கொண்டுள்ளதன் காரணமாக இந்த நிகழ்விற்கு "ஐன்ஸ்டீன் குறுக்கு வெட்டுகள்" என்று பெயரிடப் பட்டது.
  • ஈர்ப்புப் புல ஒளி விலகல் அமைப்பைச் சுற்றி துடிப்பண்டத்தின் நான்கு பிரகாசமான உருவங்கள் உருவானதன் மூலமாக இந்த வடிவமானது உருவாக்கப் பட்டது.
  • இந்த நிகழ்வில், முன்புறத்தில் அமைந்த நீள்வட்ட அண்டமானது, சுமார் 11 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பின்புற அண்டத்திலிருந்து வரும் ஒரு ஒளிக் கற்றையைச் சிதைத்துப் பிளவுபடுத்தியுள்ளது.
  • அந்த நீள்வட்ட அண்டமானது பூமியிலிருந்து 6 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • ஐன்ஸ்டீன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிப் படுத்தலுக்குக் காரணமான ஒளிவில்லை (ஈர்ப்புப் புல ஒளிவிலகல் அமைப்பு) ஆனது, சமீபத்தில் 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள கிட் பீக் தேசிய ஆய்வகத்தில் உள்ள கருப்பு ஆற்றல் நிறமாலை கருவியால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்