TNPSC Thervupettagam
September 11 , 2022 810 days 681 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மத்திய அகச்சிவப்பு கருவியானது (MIRI) "ஐன்ஸ்டீன் வளையத்தின்" சரியான படத்தைப் பிடித்துள்ளது.
  • ஐன்ஸ்டீன் வளையம் ஆனது சவோல்சன் வளையம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஐன்ஸ்டீன் வளைய நிகழ்வானது முதன்முதலில் 1988 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது ஒரு விண்மீன், நட்சத்திரம் அல்லது பிற ஒளி உமிழும் அண்ட பொருட்களிலிருந்து வரும் ஒளியானது பூமியை அடையும் முன் ஒரு மாபெரும் பொருளின் அருகே செல்லும் போது உருவாக்கப் படுகின்ற ஒரு ஒளி வளையமாகும்.
  • இது நிகழும் போது, ​​ஈர்ப்புக் குவியமானது ஒளி திசை திருப்பப்படுவதற்குக் காரணம் ஆகிறது.
  • மேலும் மூலம், குவிய வில்லை மற்றும் ஆய்வு செய்யும் பொருள் ஆகிய அனைத்தும் சரியான சீரமைப்பில் இருந்தால், இந்த ஒளி ஒரு வளையமாகத் தோன்றும்.
  • எனவே, இந்த வளையம் என்பது விண்வெளியில் உள்ள உண்மையான ஒரு அமைப்பு அல்ல.
  • ஆனால் ஈர்ப்புக் குவிய விளைவின் காரணமாக ஒளி மற்றும் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் ஒரு நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்