TNPSC Thervupettagam
May 29 , 2018 2406 days 785 0
 
  • IPL 11 என்றும் அழைக்கப்படும் தற்போதைய 2018 இந்திய பிரீமியர் லீக் சீசன், IPL தொடரின் 11வது பதிப்பாகும்.
  • இது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் ஏற்படுத்தப்பட்ட தொழில்முறை T20 கிரிக்கெட் போட்டியாகும்.
  • இந்த வருடப் போட்டி, 2013 IPL சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் இடம் பெற்ற காரணத்தினால் இரண்டு வருடங்கள் தடை பெற்று அது முடிந்து மீண்டும் போட்டிக்கு திரும்பிய பதிப்பாகும்.

  • மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.
  • சென்னை அணியின் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து அவுட்டாகாமல் விளையாடியமைக்காக ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்த வருடப் போட்டியில் மொத்தம் 735 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவிப்பாளருக்கான ஆரஞ்சு நிறத் தொப்பியை வென்றுள்ளார்.
  • இந்த வருடப் போட்டியில் 24 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியமைக்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆண்ட்ரூ டை ஊதா நிறத் தொப்பியை வென்றுள்ளார்.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரரான சுனில் நரைன், தொடர் நாயகன் என்றும் அறியப்படும் மிகுந்த மதிப்புமிக்க வீரர் விருதையும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் தொடரின் எழுச்சிமிகு வீரர் விருதையும் வென்றுள்ளனர்.
  • இந்த வருட IPL பதிப்பில், பேட்ஸ்மேன்கள் மத்தியில் மிகுந்த சராசரியையும், அடித்து ஆடும் விகிதத்தையும் அதிகம் கொண்ட வீரராக சென்னை சூபபர் கிங்ஸ் அணியின் தலைவர் MS தோனி விளங்குகிறார்.
  • இந்திய சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸின் சமீபத்திய வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வருடங்களாக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • முந்தைய இரண்டு வருடங்களான 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் கரண் சர்மா முறையே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்