TNPSC Thervupettagam

ஐரோப்பாவின் மிகப்பெரிய அரிய மண்தாதுப் படிவு

January 24 , 2023 544 days 283 0
  • ஐரோப்பாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அரிய மண் தாதுக்களின் மிகப்பெரிய படிவுகளில், ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான அரிய மண் தாது ஆக்சைடுகள் இருப்பதாக ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்தது.
  • ஐரோப்பாவில் தற்போது அரிய மண் தாதுச் சுரங்கங்கள் ஏதும் இல்லை.
  • உலகின் அரிய மண் தாதுக்கள் விநியோகத்தில் 61% சீனா உற்பத்தி செய்கிறது.
  • உலகில் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய அரிய மண் தாதுப் படிமமானது, வடக்கு சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள பயான் ஓபோ என்ற பகுதியாகும்.
  • இங்கு 1957 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்படுகிற நிலையில் இது சுமார் 40 மில்லியன் டன் இருப்புகளைக் கொண்டுள்ளது.
  • மொத்தமாக 17 அரிய மண் தாதுக்கள் உள்ள நிலையில் அவை அவற்றின் சிறந்த காந்தம் மற்றும் கடத்துத்திறன் பண்புகளுக்காக அதிகளவில் மதிப்பிடப்படுகின்றன.
  • தற்போது பிரபலமாகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் அரியமண் தாது நியோ டைமியம், போரான் மற்றும் இரும்புடன் கலக்கப்பட்டு உலகின் வலிமையான நிலைக் காந்தங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • கைபேசிகள், வன்தட்டுகள் மற்றும் இரயில்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்