TNPSC Thervupettagam

ஐரோப்பியப் பசுமை ஒப்பந்தம்

December 26 , 2019 1703 days 660 0
  • 2050 ஆம் ஆண்டிற்குள் "காலநிலைச் சமநிலைப் பகுதியாக" மாறுவதை உறுதி செய்வதற்காக, அனைத்து உறுப்பு நாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
  • இது சமீபத்தில் நிறைவு பெற்ற வருடாந்திர மாட்ரிட் காலநிலை பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருந்தது.
  • 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமானது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் உலகின் மூன்றாவது பிராந்தியமாக உருவெடுத்துள்ளது.
  • 2050 ஆம் ஆண்டின் “காலநிலை நடுநிலை இலக்கு” என்பதற்கு ஒப்புக் கொண்ட முதலாவது மிகப்பெரிய உமிழ்ப்பான் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.
  • உமிழ்வுக் குறைப்புகளுக்காக 1990 என்ற அடிப்படை ஆண்டைத்   தக்க வைத்துக் கொள்ளும் முக்கியமான உமிழ்வு நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றாகும். இந்த அடிப்படை ஆண்டானது முதன்முதலில் அனைத்து வளர்ந்த நாடுகளுக்கும் கியோட்டோ நெறிமுறையின் கீழ் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.
  • பெரும்பாலான பிற நாடுகள் தங்கள் அடிப்படை ஆண்டை 2005க்கு மாற்றின அல்லது பின்னர் 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்த அடிப்படை ஆண்டை மாற்றி விட்டன.
  • கியோட்டோ உடன்படிக்கையானது வளமான மற்றும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்