TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் உலக வரி ஏய்ப்பு அறிக்கை 2024

November 5 , 2023 257 days 193 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி கண்காணிப்பு அமைப்பானது, அதன் 2024 ஆம் ஆண்டு உலக வரி ஏய்ப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இது உலகக் கோடீஸ்வரர்களின் சொத்துக்களின் மீது 2 சதவீதத்திற்குச் சமமான உலகளாவிய குறைந்த பட்ச வரி விதிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.
  • இது வரி ஏய்ப்பினை நிவர்த்தி செய்யவும், 3,000க்கும் குறைவான நபர்களிடமிருந்து சுமார் 250 பில்லியன் டாலர் நிதியினை ஈட்டவும் உதவும்.
  • அமெரிக்காவில், கோடீஸ்வரர்களின் தனிநபர் வரி சுமார் 0.5 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • பிரான்ஸ் போன்ற அதிக வரி செலுத்தும் நாடுகளில் இது சுழிய அளவில் கூட இருக்கலாம்.
  • கோடீஸ்வரர்களின் செல்வம் ஆனது, 1995 ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு சராசரியாக 7% வளர்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்