ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆனது காஃபின் பற்றிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது என்ற நிலையில் அதன் புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் "காஃபினை உட்கொள்வது மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும்" என்று குறிப்பிடுகிறது.
இந்த 27 நாடுகளின் கூட்டமைப்பு ஆனது புதிய ஒழுங்குமுறையில், காஃபினை பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது.
காபியின் ஒரு முக்கியக் கூறு ஆனது இதயம், நீரேற்றம் மற்றும் உடல் வெப்பநிலையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அது கூறியுள்ளது.
இந்த எச்சரிக்கையானது, காபி நுகர்வைத் தடுக்க வாய்ப்பில்லை, ஆனால் மிகத் தீவிர கட்டுப்பாட்டு விதிமுறை ஆக அது அமலுக்கு வர உள்ளது.