27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஆனது மற்றொரு இலட்சியமிக்க மற்றும் முதல்-வகையான கார்பன் எல்லை இணக்க முறைமையினை (CBAM) அறிமுகப் படுத்தவுள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நிலையில் அதனை உற்பத்தி செய்யும் நபர்களுக்கான ஒரு வர்த்தகக் களத்தினைச் சமன் செய்வதோடு, பருவநிலைச் சார்ந்த நடவடிக்கைகளுக்காக முக்கியமான அணுகுமுறையாக கார்பன் விலை நிர்ணய முறைகளை கடைப்பிடிக்க வர்த்தகப் பங்குதாரர்களை ஊக்குவிக்கச் செய்வதனை இலக்காகக் கொண்டுள்ளது.
ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கார்பன் எல்லை வரி குறித்த அரசியல் ஒப்பந்தத்தினை உருவாக்கினர்.
ஆனால் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டின் 27வது பங்கு தாரர்கள் மாநாட்டின் (COP27) இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தினை எதிர்த்தது.
கார்பன் எல்லை இணக்க முறைமையானது தீவிரக் கார்பன் வெளியீடு சார்ந்தப் பொருட்களின் இறக்குமதிகளின் தொகுப்பின் மீது வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
இது போன்ற பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வரியினைச் செலுத்த வேண்டும்.