TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஹொரைசன் அறிவியல் ஆராய்ச்சி திட்டம்

September 13 , 2023 440 days 224 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அறிவியல் தகவல் பகிர்வு திட்டமான ஹொரைசன் ஐரோப்பா திட்டத்தில் பிரிட்டன் மீண்டும் இணைய உள்ளது.
  • வடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக இந்தத் திட்டத்தில் இருந்து ஐக்கியப் பேரரசு கடந்த மூன்று ஆண்டுகளாக விலக்கப் பட்டு இருந்தது.
  • ஐரோப்பிய ஒன்றிய விண்வெளித் திட்டத்தின் ஒரு முக்கியமான புவிக் கண்காணிப்பு அங்கமான கோபர்நிகஸ் திட்டத்திலும் பிரிட்டன் மீண்டும் இணைய உள்ளது.
  • ஹொரைசன் நிறுவனமானது ஐக்கிய இராஜ்ஜியத்தினைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு, சுகாதாரம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான துறைகளில், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான உலகளாவியத் திட்டங்களுக்கு பல்வேறு நிகரற்ற வாய்ப்புகளை வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்