TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொசோவோ

December 24 , 2022 576 days 290 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைவதற்கான ஒரு விண்ணப்பத்தினை கொசோவோ அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தது.
  • ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் உரிமைக்கு விண்ணப்பித்த கடைசி மேற்கத்திய பால்கன் நாடு கொசோவோ ஆகும்.
  • கொசோவோ 2008 ஆம் ஆண்டில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்த அல்பேனிய இனம் சார்ந்த ஒரு பிரதேசமாகும்.
  • ஆனால் செர்பியா நாடானது தனது முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றுடன் சேர்ந்து செர்பியாவினை இன்னும் தனது எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியாகவே கருதுகிறது.
  • எனவே, கொசோவோ ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பெறவில்லை.
  • ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், ரோமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் சைப்ரஸ் ஆகிய ஐந்து நாடுகளும் கொசோவோ நாட்டினை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்