இந்திய-அமெரிக்க வேதியியலாளரான சுமிதா மித்ரா என்பவருக்கு ஐரோப்பிய நாடுகள் சாரா காப்புரிமை அலுவல் நாடுகள் பிரிவில் 2021 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
வலுவான மற்றும் கலையுணர்வுடன் கூடிய பல்துளை நிரப்புதலுக்கான பல்மருத்துவ பொருட்களில் முதன்முறையாக நானோ தொழில் நுட்பத்தினை வெற்றிகரமாக பயன்படுத்தியவர் இவராவார்.
இந்த விருதானதுஐரோப்பியக் காப்புரிமை அலுவலகத்தினால் ஆண்டுதோறும் வழங்கப் படுகிறது.
இது ஐரோப்பா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சிறப்பான கண்டுபிடிப்பாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக வழங்கப்படுகிறது.