கிரேக்க புராணங்களில் காற்றின் பாதுகாவலரின் பெயரான ‘ஏயலஸ்’ எனப் பெயரிடப்பட்ட செயற்கைக்கோளானது ஐரோப்பாவால் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏவப்பட்டது.
இந்த செயற்கைக் கோளானது பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் கீழ்மட்ட 30 கி.மீ. அளவில் காற்றை அளவிடும்.
மேம்பட்ட லேசர் அமைப்பான ‘டாப்ளர் காற்று லைடார்’ (Doppler wind lidar) என்ற ஒற்றைக் கருவி இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது.
இது சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA – European Space Agency) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘கோபர் நிக்கஸ் திட்டத்தின்‘ ஒரு பகுதியாகும்.
இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கான ஏரியன் ஸ்பேஸின் 50வது ஏவுதல் ஆகும்.
ஏயலஸ் ஆனது ESA-வின் திட்டமிட்ட 5வது புவி ஆய்வுப் பயணமாகும்.