TNPSC Thervupettagam
April 7 , 2020 1568 days 550 0
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சார்ஸ் – கோவ்2 வைரஸைக் கொல்லும் ஒரு பொது ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான “ஐவர்மெக்டின்” என்ற ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியாளர் குழுவானது ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஸ் பல்கலைக்கழகத்தின் உயிரிமருந்து கண்டுபிடிப்பு நிறுவனம் மற்றும் பீட்டர் டோரத்தி தொற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு உருவாக்கப் பட்டதாகும். 
  • இது ஒரு ஓட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது எச்ஐவி, டெங்கு, இன்புளூயன்சா மற்றும் ஜிகா வைரஸ் போன்ற வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டதாகும்.
  • இது தற்பொழுது உருளைப்புழுக்களால் ஏற்படும் ஒரு ஓட்டுண்ணி நோயான ஸ்ட்ரான்கிலாய்டியாஸிஸ் என்ற நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இது வைரஸ் எதிர்ப்பு ஆராய்ச்சி என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
  • இது முதன்முதலில் 1975 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு, 1981 ஆம் ஆண்டில் மருத்துவப் பயன்பாட்டிற்கு வந்தது.
  • இது உலகச் சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்