TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ். கரன்ஜ்

February 1 , 2018 2491 days 853 0
  • மும்பையில் உள்ள மஸாகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்றாவது கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் நீர்மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை தொடங்கி வைத்துள்ளது.
  • 1969 முதல் 2003 வரை இந்திய கடற்படையில் செயல்பாட்டில் இருந்த கல்வாரி வகுப்பு கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் கப்பலினுடைய பெயரே ஸ்கார்பீன் வகுப்பின் மூன்றாவது கப்பலான இதற்கும் சூட்டப்பட்டுள்ளது.
  • ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களே இந்தியக் கடற்படையின் முதல் நவீன வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் தொடராகும்.
  • திட்டம் 75-ன் கீழ் பிரெஞ்ச் நிறுவனமான DCSN-ன் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையிலுள்ள மஸாகான் கப்பல் கட்டுந்தளத்தில் 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • இதற்கு முன் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள முதல் இரு ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களாவன :
    • ஐ.என்.எஸ். கல்வாரி
    • ஐ.என்.எஸ். கந்தேரி
  • 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களில் இன்னும் வெளியிடப்பட வேண்டிய பிற மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களாவன:
    • ஐ.என்.எஸ். வேலா (Vela)
    • ஐ.என்.எஸ். வாகிர் (Vagir)
    • ஐ.என்.எஸ். வக்ஸ்ரீ (Vagshree)
  • இவை கட்டமைக்கப்பட்டு படிப்படியாக 2020-ல் செயல்பாட்டிற்கு வரும்.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளின் அடக்க குறிப்புகள்

  • ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களானது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti-ship missile) பொருத்தப்பட்ட டீசல்-எலக்ட்ரிக் எஞ்சினுடைய தாக்குதல் கப்பல்களாகும்.
  • எதிரிகளின் ரேடாரில் புலப்படாமல் மறைய வல்ல தொழில்நுட்பமும் (Stealth technology), துல்லிய வழிகாட்டு ஆயுதங்களுடன் முடக்குத் தாக்குதல்களை தொடுக்கவல்ல திறனும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உள்ளது.
  • 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளில் முதல் 4 நீர்மூழ்கிகள் டீசல்-எஞ்சினுடைய வழக்கமான (Conventional) கப்பல்களாகும்.
  • கடைசி இரு கப்பல்கள் காற்று உந்துவிசை அமைப்பை (Air Independent Propulsion) கொண்டவையாகும். இதனால் இவை குறிப்பிட்ட நாட்கள் கழித்து நீரின் மேற்பரப்பிற்கு வந்து ஆக்ஸிஜன் பெற்று தன் மின்கலன்களை மீள்நிரப்பம் செய்ய தேவையில்லை. நீடித்த நாட்களுக்கு மூழ்கியபடியே இருக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்