ஐஎன்எஸ் கருடா, ஒருங்கிணைந்த தானியங்கி வளிமண்டலவியல் வான் பயண முறையோடு (Integrated Automatic Aviation Meteorological Systems - IAAMS) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் கருடா என்பது கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடற்படை விமான நிலையம் ஆகும்.
IAAMS என்பது ஒன்பது கடற்படை விமான நிலையங்களின் வளிமண்டலவியல் கட்டமைப்பை மேம்படுத்திட திட்டமிடும் இந்திய கடற்படையின் உன்னதமான திட்டமாகும்.
ஐஎன்எஸ் கருவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள IAAMS திட்டமானது, தானியங்கி முறையிலான வானிலை கண்காணிப்பு முறையின் மூலமாக வான் பயணப் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தும்.
பாதுகாப்பான பயண நடவடிக்கைகளை பாதிக்கும் அசாதாரண வானிலை மாற்றங்கள் பற்றி பணியில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கையை கொடுக்கும் ஒரு சிறப்பு எச்சரிக்கை வசதியை இது கொண்டுள்ளது.
உலக வளிமண்டலவியல் அமைப்பின் (World Meteorological Organization – WMO) தரவுகளின் அடிப்படையில் கடற்படை விமான நிலையத்தின் வழக்கமான வானிலை அறிக்கைகளை மற்ற நிலையங்களுக்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாடு (Air Traffic Control – ATC) கோபுரங்களுக்கும் மனிதத் தலையீடுகள் இன்றி தானியங்கி முறையில் தகவல் பரப்பும் முறையையும் இது கொண்டுள்ளது.