TNPSC Thervupettagam
October 1 , 2018 2249 days 667 0
  • தெற்கு சூடானின் மருத்துவர் ஈவன் அடார் அடஹா, 2018 ஆம் ஆண்டின் UNHCR-ன் (UN High Commissioner for Refugees) நான்சென் அகதிகள் விருதை பெறுகிறார்.
  • சூடான் மற்றும் தெற்கு சூடானில் நடைபெற்ற துன்புறுத்தல்கள் மற்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் கடந்த 20 வருடங்களாக இருந்த ஈடுபாட்டிற்காக இவ்விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்.
  • நான்சென் பரிசானது, உலக நாடுகளின் சங்கத்தின் முதல் அகதிகளுக்கான உயர் ஆணையராக பணியாற்றிய நார்வே நாட்டைச் சேர்ந்த துருவ ஆராய்ச்சியாளர் ஃப்ரித்ட்ஜோப் நான்சென் பெயரின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • இந்த விருதானது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கு அசாதாரண சேவையளித்தோர்க்கு வழங்கப்படுகிறது.
  • கடந்த ஆண்டு நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜன்னா முஸ்தபாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்