TNPSC Thervupettagam
September 19 , 2017 2672 days 921 0
  • ஜன்னா முஸ்தபா எனும் நைஜீரிய வழக்கறிஞருக்கு நான்சென் (Nansen) விருது எனப்படும் வருடாந்திர ஐ.நா. அவையின் அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • நைஜீரிய பயங்கரவாத குழுவான போகோ ஹராமால் கடத்தப்பட்ட நூறு பள்ளிச்சிறுமிகளை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சமரச பேச்சுவார்த்தையிலும், வடகிழக்கு நைஜிரியாவில் வறுமை, அரசு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கிடையேயான சண்டைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றியதால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
போகோஹராம் – ஒரு பார்வை
  • ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நைஜீரியாவில் 2002ல் நிறுவப்பட்ட ஓர் இஸ்லாமிய பயங்கரவாத குழு.
  • மேற்கத்திய கல்வி மற்றும் கலாச்சார எதிர்ப்பு, கலிபா ஆட்சியின் கீழான ஒன்றிணைக்கப்பட்ட இஸ்லாமிய தேசத்தை உருவாக்குதல் இதன் நோக்கமாகும்.
  • 2013ல் சர்வதேச தீவிரவாத குழுவாக பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது இவற்றின் ஆதிக்கப் பகுதிகள் இராணுவத்தால் மீட்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்