ஐ.நா. உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகளின் படி இந்தியப் பொருளாதாரமானது 2018-2019 ஆம் நிதி ஆண்டில்6% வளர்ச்சியைக் காண உள்ளது. இந்த வளர்ச்சியானது, இந்தியாவை உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவாக்குகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2017-2018 மற்றும் 2018-2019 நிதியாண்டுகளில் முறையே5% மற்றும் 7.6% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வறிக்கையின் படி உலகப் பொருளாதாரம் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில்2%-ஐ அடையும். இந்த அளவானது டிசம்பர் 2017-ல் குறிப்பிடப்பட்ட அளவைவிட முறையே 0.2% மற்றும் 0.1% அதிகரித்துள்ளது.
இவ்வறிக்கையின்படி சீனாவின் பொருளாதாரம் படிப்படியாக 2017ல்9% லிருந்து 2018ல் 6.5% ஆகவும் 2019ல் 6.3% ஆகவும் இருக்கும்.
இந்த அறிக்கையானது ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN/DESA), ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான மாநாடு (UNCTAD) மற்றும் ஐ.நா.வின் மண்டலக் குழுக்கள் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும்.