அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக உணவு திட்டத்திற்கு 370 மில்லியன் டாலர்களை வழங்குவதற்கு சுவீடன் அரசானது ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்புடன் (UN World Food Programme - WFP) முக்கியத்துவ கூட்டிணைவு ஒப்பந்தத்தை (Strategic Partnership Agreement) மேற்கொண்டுள்ளது.
2018 முதல் 2021 வரையிலான நான்காண்டு காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சுவீடனின் இந்த நிதிப் பங்களிப்பானது WFP-ன் முக்கியத்துவ கூட்டு ஒப்பந்தத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட நிதிப் பங்களிப்புகளில் மிகப்பெரிய அளவிலான ஒன்றாகும்.
உலக உணவுத் திட்டம்
உலக உணவுத் திட்டமானது உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தால் (FAO-Food And Agriculture Organisation ) 1961ல் நிறுவப்பட்டது.
இதன் தலைமையகம் ரோமில் உள்ளது.
உலக உணவுத் திட்ட நிறுவனமானது ஐ.நா.வின் உணவு சார்ந்த அம்சங்களில் துணைபுரியும் நிறுவனமாகும்.
உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நிறுவனமான இது உலக அளவில் வறுமை மற்றும் பட்டினியைப் போக்குவதையும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் முக்கியப் பணிகளாக கொண்டுள்ளது.