TNPSC Thervupettagam

ஐ.நா. காலநிலை நடவடிக்கை விருது

December 18 , 2018 2042 days 540 0
  • உத்திரப்பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஹெல்ப்அஸ்கிரீன்’ (HelpUsGreen) எனும் புதிய தொழில் நிறுவனமானது டன் கணக்கிலான பூக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான பணிகளுக்காக ஐ.நா.வால் கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • போலந்தின் கட்டோவைஸில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டின் தேசிய காலநிலை நடவடிக்கை விருது விழாவில் இந்தியாவுடன் இணைந்து ஏனைய 14 நாடுகளுக்கும் இந்த விருதினை ஐ.நா. வழங்கியது.
  • இது கோவில்களிலிருந்து வரும் பூக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக பூவை சுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும் இதன் மூலம் மரக்கரியற்ற ஊதுபத்திகள், கரிம மண்புழு உரம் மற்றும் மட்கக்கூடிய பொட்டலம் கட்டும் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்