ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர்கள் தகுதியில் ஆறு நாடுகள் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த ஆறு நாடுகளாவன
நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள கினியா
ஐவரி கோஸ்ட்
குவைத்
பெரு
போலந்து
நெதர்லாந்து
நிரந்தர உறுப்பினரல்லாத தகுதிக்கான இடங்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடுகள் ஐ.நா.பொது அவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இந்த வகையில் 2017-ன் டிசம்பர் 31-ஆம் தேதியோடு எகிப்து, இத்தாலி, ஜப்பான், செனகல், உக்ரைன், உருகுவே ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பதவிக் காலம் முடிந்து வெளியேறியுள்ளன.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
அவற்றில் நிரந்தர உறுப்பினர்களாக, வீட்டோ அதிகாரத்தோடு ஐந்து நாடுகள் உள்ளன.
அவையாவன
பிரிட்டன்
சீனா
பிரான்ஸ்
இரஷ்யா
அமெரிக்கா
பிற 10 நாடுகளும் நிரந்தர உறுப்பினரல்லாத வீட்டோ அதிகாரமில்லாத நாடுகளாகும்.