TNPSC Thervupettagam
October 29 , 2018 2122 days 715 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஐ.நா. மனித உரிமை விருதுகளின் வெற்றியாளர்களை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவரான மரியா எஸ்பினோசா என்பவரால் அறிவிக்கப்பட்டது.
  • மனித உரிமைகள் தினமான 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இவ்விருதை வென்றவர்கள்
    • ஆஸ்மா ஜஹாங்கீர் - பாகிஸ்தானின் மறைந்த மனித உரிமை ஆர்வலர்
    • ரெபகா கியூமி - தான்சானிய மனித உரிமை ஆர்வலர்
    • ஜியோனியா வபிசானா - பிரேசிலின் முதலாவது உள்நாட்டு வழக்குரைஞர்
    • பிரெண்ட் லைன் டிபெண்டர்ஸ் - அயர்லாந்தின் மனித உரிமைகள் அமைப்பு.

2018 ஆம் ஆண்டிற்கான விருதை வென்றவர்களின் பின்னணி

  • பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவராகப் பணியாற்றிய முதலாவது பெண்மணி ஆஸ்மா ஜஹாங்கீர் ஆவார்.
  • இந்த புகழ்பெற்ற விருதைப் பெற்ற 4வது பாகிஸ்தானியப் பெண்மணி இவராவார்.
  • 2016 ஆம் ஆண்டில் யுனிசெப்பின் க்ளோபல் கோல்ஸ் என்ற விருதை கியூமி பெற்றுள்ளார். மேலும் இவர் புதிய ஆப்பிரிக்கப் பெண்கள் பத்திரிக்கையால் ஆண்டின் சிறந்த பெண்மணியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பிரேசில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது உள்நாட்டுப் பெண்மணி வபிசானா ஆவார்.
  • 2001 ஆம் ஆண்டில் அயர்லாந்தின் டப்ளினில் அயர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட அறக்கட்டளையான பிரெண்ட் லைன் டிபெண்டர்ஸ் உருவாக்கப்பட்டது.

.நா. மனித உரிமைகள் விருது

  • 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இவ்விருதுகள் உருவாக்கப்பட்டன.
  • இவ்விருதுகள் முதன்முறையாக 1968 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன. அன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்